பஞ்சாப்: 8 ஆலோசனைக்குழுக்களை அமைத்தார் முதல்வர் அமரீந்தர்; சித்துவுக்கு இடமில்லை!

பஞ்சாப் மாநில அரசின் முக்கியத் திட்டங்களை வகுப்பதற்காக, அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் 8 ஆலோசனைக்குழுக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதிலுள்ள
பஞ்சாப்: 8 ஆலோசனைக்குழுக்களை அமைத்தார் முதல்வர் அமரீந்தர்; சித்துவுக்கு இடமில்லை!

பஞ்சாப் மாநில அரசின் முக்கியத் திட்டங்களை வகுப்பதற்காக, அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் 8 ஆலோசனைக்குழுக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதிலுள்ள எந்தக்குழுவிலும் அமைச்சர் நவ்ஜோத் சித்து இடம் பெறவில்லை.
 முதல்வரால் அமைக்கப்பட்டுள்ள 8 ஆலோசனைக் குழுக்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். ஆனால், அமைச்சர் நவ்ஜோத் சித்து மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் துறையின் அமைச்சர் ஓம்பிரகாஷ் சோனி ஆகியோர் இடம் பெறவில்லை.
 அமைச்சர் சித்து, அமரீந்தர் சிங்குடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நிலையில், சுற்றுலா மற்றும் கலாசாரங்கள் துறை அமைச்சராக இருந்த சித்துவின் இலாகா மாற்றப்பட்டு மாநில மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை இலாகாவை வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்தார் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங்.
 இலாகா மாற்றப்பட்ட பிறகு இதுவரை அந்தப் பொறுப்பை சித்து ஏற்கவில்லை.
 இந்நிலையில், ஆலோசனைக்குழுக்கள் மூலம் அரசின் திட்டங்களை மேம்படுத்தவும், திட்டங்களை உரிய வகையில் நடைமுறைப்படுத்தவும், ஆய்வு மேற்கொள்ளவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்தையும், ஏழ்மையை ஒழிக்கவும் மாநில அரசு ஏராளமான திட்டங்களை தீட்டி வருகிறது.
 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் செயல் திட்டங்கள் மேலும் நல்ல பயன்களை ஏற்படுத்தித்தர வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காகவே ஆலோசனைக் குழுக்களை அமைக்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com