பருவமழை: கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளத்தில் சனிக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக எண்ணிக்கை அளவான "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை: கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளத்தில் சனிக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக எண்ணிக்கை அளவான "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 கேரளத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 1-ஆம் தேதியிலிருந்தே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். நாடு முழுவதும் நீடித்து வரும் வறட்சியால் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என ஏற்கெனவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதன்படி கேரளத்தில் ஒரு வாரம் தாமதமாக 8-ஆம் தேதி பருவமழை தொடங்கும் என சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
 தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்து மேற்கு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 9ஆம் தேதி கொல்லம் ஆலப்புழா மாவட்டங்களுக்கும், 10ஆம் தேதி திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
 10ஆம் தேதி திருச்சூர் மாவட்டத்துக்கும், 11ஆம் தேதி எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து, பேரிடர் ஏற்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com