ராஞ்சி: ஜூன் 21-இல் சர்வதேச யோகா தின விழா; பிரதமர் பங்கேற்பு

இந்த ஆண்டுக்கான யோகா தின முக்கிய நிகழ்ச்சியை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இந்த மாதம் 21-ஆம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராஞ்சி: ஜூன் 21-இல் சர்வதேச யோகா தின விழா; பிரதமர் பங்கேற்பு

இந்த ஆண்டுக்கான யோகா தின முக்கிய நிகழ்ச்சியை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இந்த மாதம் 21-ஆம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார்.
 இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:
 சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மாதம் 21-ஆம் தேதி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. யோகா தின விழாவின் முக்கிய நிகழ்ச்சியை ராஞ்சி நகரில் நடத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 ராஞ்சியிலுள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
 சுமார் 30,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 சர்வதேச யோகா தின விழாவுக்கு முன்னோட்டமாக, வரும் 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான மாநில பிரமுகர்களும், யோகா ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள்.
 தில்லியிலுள்ள ராஜபாதை பகுதியில் நடைபெறவிருக்கும் யோகா தின நிகழ்ச்சியை தில்லி மாநகராட்சி கவுன்சிலுடன் இணைந்து சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தவிருக்கிறது.
 அதுமட்டுமன்றி, செங்கோட்டை, நேரு பூங்கா, லோதி பூங்கா, தல்கடோரா பூங்கா, யமுனா விளையாட்டு அரங்கு, ஸ்வர்ண ஜெயந்தி பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்துமாறு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனைத்து அமைச்சகங்களிடமும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
 யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு மாநில அரசுகளும் ஏராளமான ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஊடகங்களுக்கு கெளரவம்: யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், பொதுமக்களின் ஆரோக்ய வாழ்வுக்கு உதவும் ஊடகங்களை சர்வதேச யோகா தினத்தில் கௌரவிக்கவிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
 இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை யோகா குறித்து ஊடகங்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவை கெளரவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com