சுடச்சுட

  

  ஆந்திர சட்டப்பேரவை தலைவராக தம்மினேனி சீதாராம் தேர்வு

  By DIN  |   Published on : 14th June 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  setharam


  ஆந்திர சட்டப்பேரவை புதிய தலைவராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏ தம்மினேனி சீதாராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  ஆந்திர சட்டப்பேரவைக்கு அமுதலவாலசா தொகுதியில் இருந்து 6ஆவது முறையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை இடைக்கால தலைவரான எஸ்.வி.சி. அப்பல நாயுடு, பேரவைத் தலைவராக சீதாராம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை காலை அறிவித்தார்.
  இதைத் தொடர்ந்து, தலைவர் இருக்கைக்கு சீதாராமை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆகியோர் கூட்டாக அழைத்து சென்று அமர வைத்தனர்.
  அதேநேரத்தில், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பேரவைத் தலைவரை அவரது இருக்கைக்கு அழைத்து செல்லும் பாரம்பரிய வழக்கத்தில் பங்கேற்கவில்லை.
  சட்டப்பேரவைத் தலைவரான சீதாராம், தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 1983, 1985, 1991, 1994, 1999 ஆகிய ஆண்டுகளில் தெலுங்கு தேசம் சார்பாக எம்எல்ஏவாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
  சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசுகளில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜீயம் கட்சியில் இணைந்தார். இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சிக்கு மீண்டும் திரும்பினார். காங்கிரஸ் கட்சியுடன் பிரஜா ராஜ்ஜீயம் 2012ஆம் ஆண்டில் இணைந்தது. இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai