அணைத்து சொல்ல வைக்கலாம்; அடித்து அல்ல: 'ஜெய் ஸ்ரீராம்' சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் 

ஒருவரை அணைத்து 'ஜெய் ஸ்ரீராம்'  சொல்ல வைக்கலாம்; அடித்து அல்ல என்று ஜார்கண்ட் மரணம் குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அபபாஸ் நக்வி விளக்கம் அளித்துள்ளார்.
அணைத்து சொல்ல வைக்கலாம்; அடித்து அல்ல: 'ஜெய் ஸ்ரீராம்' சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் 

புது தில்லி: ஒருவரை அணைத்து 'ஜெய் ஸ்ரீராம்'  சொல்ல வைக்கலாம்; அடித்து அல்ல என்று ஜார்கண்ட் மரணம் குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அபபாஸ் நக்வி விளக்கம் அளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஞாயிறன்று இஸ்லாமிய வாலிபர் ஒருவரை திருட்டுக் குற்றம் சுமத்தி பிடித்தவர்கள், அவரை 'ஜெய் ஸ்ரீராம்'  என்று கூறுமாறு வலியுறுத்தி அடித்துக் கொன்றுள்ளார்கள்.இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒருவரை அணைத்து 'ஜெய் ஸ்ரீராம்'  சொல்ல வைக்கலாம்; அடித்து அல்ல என்று ஜார்கண்ட் மரணம் குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அபபாஸ் நக்வி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் முக்தர் அபபாஸ் நக்வி. இவர் செவ்வாயன்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்,. நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜார்கண்ட்  இஸலாமிய வாலிபர் மரணம்ம் குறித்த கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது:

நீங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி  'ஜெய் ஸ்ரீராம்'  சொல்ல வைக்க முடியாது. ஆனால் அவரை அணைத்து அன்பால் சொல்ல வைக்கலாம்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. சட்டத்தில் இத்தகைய குற்றங்களுக்கு இடமே இல்லை.

நாங்கள் வளர்ச்சி நோக்கிய எங்களது செயல் திட்டங்களில் உறுதியாக இருக்கிறோம். இத்தகைய அழிவுத் திட்டங்களுக்கு அதில் இடம் இல்லை.

இத்தகைய செயல்களில் ஈடுபட்ட விஷமிகள் அரசின் நற்பெயரைக் குலைக்கிறார்கள். அவர்கள் சட்டத்தை எதிர்கொண்டா க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com