
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியார் கணிப்பொறி பயிற்சி மையத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 மாணவர்கள் பலியானர்கள்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தனியார் கணிப்பொறி பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றார்கள். அவர்கள் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முஹல் ரோட் என்னும் பகுதிக்கு அருகி வந்தபோது அவர்கள் சென்ற வாகனமானது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 மாணவர்கள் பலியானர்கள். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
விபத்துக் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் காயம்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...