அஞ்சல் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் சதானந்த கெளடா

அஞ்சல் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் சதானந்த கெளடா

அஞ்சல் அலுவலகங்களில் அனைத்து சேவைகளையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
Published on

அஞ்சல் அலுவலகங்களில் அனைத்து சேவைகளையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
பெங்களூரு ஜாலஹள்ளி அஞ்சல் அலுவலகத்தில்,  பாஸ்போர்ட் வழங்கும் சேவையைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:  அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளுக்குச் சென்று கடிதம் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  அஞ்சல் தொடர்பான விவகாரங்கள் மட்டுமே அஞ்சல் அலுவலகங்களில் நடைபெற்று வந்தன.  தற்போது நிலைமை மாறியுள்ளது.  கடிதங்கள் எழுதுவது குறைந்துள்ளது. எனவே, கடிதங்களைக் கொண்டு செல்லும் பணியும் ஊழியர்களுக்கு குறைந்துள்ளது. 
இதனால் அவர்களுக்கு மாற்றுப் பணியை வழங்கும் நோக்கில் பல்வேறு சேவைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோஹம்.  அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மட்டுமின்றி,  வங்கிகள் உள்ளிட்ட சேவைகள் தொடங்குவதன் மூலம் எல்லைகளில் உள்ள கிராமங்களுக்கு அனைத்து சேவைகளையும் கொண்டு செல்ல முடியும். 
பிரதமரின் சுகாதாரத் திட்டம் உள்ளிட்டவையும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைகிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.  அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவையைத் தொடங்கியுள்ளது பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும்.  இந்த சேவையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில்,  பெங்களூரு மண்டல அஞ்சல் அலுவலக மூத்த அதிகாரி பரத்குமார்,  பிஇஎல் பொதுமேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com