
கர்நாடக மாநிலம், தார்வாடில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 72 மணி நேரத்துக்குப் பிறகு கணவன் - மனைவி உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மதியம் 3.30 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர், வெள்ளிக்கிழமை மதியம் 3.15 மணிக்கு கணவன் - மனைவியை உயிரோடு மீட்டுள்ளனர்.
உடனடியாக அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கட்டட விபத்து: மதிய உணவுக்கு சற்று தாமதமானதால் உயிரை இழந்த தந்தை-மகன்
தார்வாட் குமரேஸ்வரநகரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டடம், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததில் கீழ்மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 14 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலர் இடிப்பாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...