
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம் கடந்த 24 மணி நேரமாக நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பந்திப்போரா மாவட்டம் ஹஜின் பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்சிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு பாதுகாப்புப் படைக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த போது பொதுமக்கள் இரண்டு பேரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
பிணைக் கைதிகளில் ஒருவர் நேற்று இரவு மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாக அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...