அளவுக்கு அதிகமான சுயேச்சைகளால் திக்குமுக்காடிய பொதுத் தேர்தல் பற்றிய சுவாரஸ்ய தகவல்

அளவுக்கு அதிகமான சுயேச்சைகளால் திக்குமுக்காடிய பொதுத் தேர்தல் பற்றிய சுவாரஸ்ய தகவல்

இந்தியாவில் 1951ம் ஆண்டு முதல் இதுவரை 16 முறை பொதுத் தேர்தல் நடைபெற்று நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற உள்ளது இந்தியாவின் 17வது பொதுத் தேர்தலாகும்.


இந்தியாவில் 1951ம் ஆண்டு முதல் இதுவரை 16 முறை பொதுத் தேர்தல் நடைபெற்று நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற உள்ளது இந்தியாவின் 17வது பொதுத் தேர்தலாகும்.

இதுவரை நடந்த பொதுத் தேர்தல்கள் பற்றிய புள்ளி விவரங்களில் ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் சிலவற்றை சிறு துளிகளாக பகிரும் வகையில்  இன்றைய விஷயம் இது..

1951ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 1874 பேர் போட்டியிட்டு 745 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இதுபோல 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,070ல் 6829 பேர் டெபாசிட் இழந்துள்ளதும், 2014ம் ஆண்டு போட்டியிட்ட 8251 பேரில் 7000 பேர் டெபாசிட் இழந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

சரி, இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களிலேயே அதிக வேட்பாளர்கள் குறிப்பாக அளவுக்கு அதிகமான சுயேச்சை வேட்பாளர்கள் களம் கண்ட தேர்தல் எது தெரியுமா? 1996ம் ஆண்டு தேர்தல்தான். அந்த வருடம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13,952 பேர். அதில் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டும் 10,636 பேர்.  அதுவரையும் சரி, அதன் பிறகும் சரி அதிகபட்சமாக போட்டியிட்ட வேட்பாளர்கள் என்பது 1991ம் ஆண்டு 8,668 பேர் (சுயேச்சை 5514) தான். 

முன்னெப்போதும் இல்லாத வகையில் 1996ம் ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேச்சைகள் களம் கண்டதால், தேர்தல் களமே வேட்பாளர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடியிருக்கலாம்.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியா முழுவதும் போட்டியிட்ட 10,636 சுயேச்சை வேட்பாளர்களில் 10,604 பேர் டெபாசிட் இழந்ததுதான். அதாவது வெறும் 32 சுயேச்சைகள் தான் தேர்தலுக்காக தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுள்ளனர் என்பதுதான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அந்த ஆண்டு போட்டியிட்ட 13,952 பேரில் 12,688 பேர் டெபாசிட் இழந்து கிட்டத்தட்ட தேர்தல் செலவுக் கணக்கை ஓரளவுக்கு சரிகட்டியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com