
பெங்களூரு: தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
53 வயதாகும் பிரகாஷ் ராஜ், கன்னடா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகராவார்.
மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டன. மக்களின் குரலாக ஒலிக்க நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...