தேர்தல் ஸ்பெஷல்: மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற சாதனையாளர்கள்! மிக மிகக் குறைந்த வித்தியாசம்?

தேர்தல்.. இன்னும் 3 வாரத்தில் தமிழகத்தை தாக்கவிருக்கிறது மக்களவைத் தேர்தல் எனும் புயல். சூறாவளிப் பிரசாரம், வேட்பு மனுத் தாக்கல் தீவிரம் என புயல் சின்னம் களைகட்டத் தொடங்கிவிட்டது.
Lok Sabha Election 2019 Special
Lok Sabha Election 2019 Special

தேர்தல்.. இன்னும் 3 வாரத்தில் தமிழகத்தை தாக்கவிருக்கிறது மக்களவைத் தேர்தல் எனும் புயல். சூறாவளிப் பிரசாரம், வேட்பு மனுத் தாக்கல் தீவிரம் என புயல் சின்னம் களைகட்டத் தொடங்கிவிட்டது.

தேர்தல் என்றால் பேசவும், படிக்கவும் ஏராளமான செய்திகள் உண்டு. தேர்தலில் எஜமானர்கள் என்னவோ வாக்காளர்கள்தான். ஆனால் வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செய்யும் அக்கப்போருகள்தான் ஏராளம்.. ஏராளம்.

ஒரு வாக்காளரிடம் இருப்பது என்னவோ ஒரு வாக்குத்தான். அந்த ஒரு வாக்கைப் பெற வேட்பாளர் போடும் குட்டிக்கரணங்கள் எண்ணற்றவை. இப்போது நடக்கும் சுவாரஸ்ய பேச்சுக்களும் நிகழ்வுகளும் அன்றைய தினமே செய்திகளாகவும், விடியோக்களாகவும் வாக்காளர்களை நேரடியாக சென்றடைந்து விடுகிறது.

ஆனால் இதற்கு முன்பு இந்த அளவுக்கு ஊடகங்களோ சமூக தளங்களோ இல்லாததால் வரலாற்றில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்வது நிச்சயம் வாக்காளர்களுக்கு பலனளிக்குமோ அளிக்காதோ தெரியாது.. ஆனால் ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொண்ட திருப்தி கிடைக்கும்.

சரி வாருங்கள்.. சொல்ல வந்தது என்னவென்று பார்க்கலாம்.

1962ம் ஆண்டு முதல் 2014ம் ஆணடு வரை கிடைத்த புள்ளி விவரத்தில், ஒவ்வொரு தேர்தலின் போதும், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை இங்கே நாம் பார்க்கலாம். மிகக் குறைந்த என்றால் மிக மிகக் குறைந்த என்று கூட சொல்லலாம். 

அதாவது 1962ம் ஆண்டு புறநகர் மணிப்பூர் தொகுதியில் சமூகக் கட்சி வேட்பாளர் ரிஷங் 42 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

1967ம் ஆண்டு ஹரியானாவின் கர்நால் தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம் 203 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 1989லும், 1998ம் ஆண்டிலும் நடந்த பொதுத் தேர்தலில் ஆந்திராவின் அனகபள்ளித் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கொனதல ராமகிருஷ்ணாவும், பிகாரின் ராஜ்மஹால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோம் மராண்டியும் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்று நீங்கள் அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு இலக்க எண் வித்தியாசத்தில் கூட இல்லை.. ஆம் வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் என்றால் அது 9 வாக்குகள்தான். இந்த சாதனை வரும் தேர்தல்களில் வீழ்த்தப்படலாம் யாருக்குத் தெரியும்?

சரி அடுத்த குறைந்தபட்ச வாக்கு வித்தியாசம் 26. அதற்கடுத்த வாக்கு வித்தியாசம் 36. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக வேட்பாளர் சீவாங் 36 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதெல்லாம் சரி.. இந்தியாவில் இந்த வாக்கு வித்தியாசம் இருந்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை மிகக் குறைந்த வாக்குவித்தியாசமாக எந்த தொகுதி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா?

இதோ..

தமிழகத்தில் 1971ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ். சிவசாமி 26 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே, இதுவரையிலான சாதனையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com