காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது இல்லையா?: பேஸ்புக் போட்ட புதுகுண்டு 

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்பது போன்ற பேஸ்புக் நிறுவனத்தின் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது இல்லையா?: பேஸ்புக் போட்ட புதுகுண்டு 

புது தில்லி: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்பது போன்ற பேஸ்புக் நிறுவனத்தின் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

உலகின் மிக பிரபலமான சமூக வலைதளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. ஆனால் பல்வேறு சம்யங்களில் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சில பொதுவான விஷயங்களில் அதன் நிலைப்பாடுகள் பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்பது போன்ற பேஸ்புக் நிறுவனத்தின் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில், அதன் இணையப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரான நாதனைல் க்ளெய்ச்சர் செவ்வாயன்று ஒரு பதிவிட்டுள்ளார். விஷமச் செயல்களில் ஈடுபடும் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான அப்பதிவில்  அவர் கூறியுள்ளதாவது:

ஈரானிலிருந்து செயல்படும் சில செய்தி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, திட்டமிட்டு முறையற்ற செய்திகளைப் பரப்பும் 513 பேஸ்புக் பக்கங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளை செவ்வாயன்று நீக்கியுள்ளோம்.

இந்தக் கணக்குகள் அனைத்தும் எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, இஸ்ரேல், இத்தாலி, காஷ்மீர், கஜகிஸ்தான் அல்லது பெரும்பாலும் மத்திய கிழக்கு வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளிலிருந்து செயல்பட்டு வந்தன.

இவற்றுடன் சேர்த்து ஈரான், ரஷ்யா, மாசிடோனியா மற்றும் கொசாவா ஆகிய பகுதிகளில் இருந்து செயல்படும் மொத்தம் 2632 பக்கங்ககளை நீக்கியுள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் சேர்த்து காஷ்மீரை தனியான ஒரு பகுதியாக  பேஸ்புக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com