இனி ராம்பூரில் கொண்டாட்டம்தான்: நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை 

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பாஜக சார்பாக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
இனி ராம்பூரில் கொண்டாட்டம்தான்: நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை 

சம்பால்: உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பாஜக சார்பாக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதா 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.  பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகினார். பின்னர் சமாஜ்வாதிக்கட்சியில் சேர்ந்த அவர், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அக்கட்சி சார்பாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2010 -ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்த அவர் தற்போது கடந்த செவ்வாயன்று பாஜ கட்சியில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு மீண்டும் ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக முக்கியத் தலைவரான ஆஸம் கான் போட்டியிடுகிறார்.

இந்நிலையில்  நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் பெரோஸ் கானின்  பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.    

வியாழனன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இனி ராம்பூரில் மாலைப் பொழுதுகள் கொண்டாட்டமாக இருக்கும். ராம்பூர் தொகுதி மக்களுக்கு ஆசம் கான் நிறைய செய்துள்ளார்.  எனவே அவரை கண்டிப்பாக வெற்றி பெறச் செய்து விடுவார்கள். ஆனால் எப்போதாவது கிடைக்க கூடிய இம்மாதிரியான வாய்ப்புகளை அவர்கள் தவற விட மாட்டார்கள். 

இவ்வாறு நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுவதால் அத்தொகுதி மக்களுக்கு இனி மாலைப் பொழுதுகள் இனிமையாக கழியும் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இந்த பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com