பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட இழப்பு சரிசெய்யப்படும்: 2 அம்ச நியாய திட்டம் அறிவித்து ராகுல் வாக்குறுதி

பொருளாதார சரிவு மீண்டும் சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நியாய திட்டம் அறிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல், வாக்குறுதி அளித்தார். 
பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட இழப்பு சரிசெய்யப்படும்: 2 அம்ச நியாய திட்டம் அறிவித்து ராகுல் வாக்குறுதி
Updated on
1 min read

பிரதமர் மோடியால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மீண்டும் சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நியாய திட்டம் அறிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல், வாக்குறுதி அளித்தார். இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்துவிட்டார். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களிடம் இருந்த பணம் காணாமல் போனது. அதிலும் பணமதிப்பிழப்பு மற்றும ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட இந்த சரிசெய்யும் விதமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 2 அம்ச நியாய திட்டம் கொண்டுவரப்படும். அதன்மூலம் முதலில் 20 சதவீத ஏழைக்குடும்பங்களின் குறைந்தபட்ச வருவாய் உறுதிசெய்யப்படும். இரண்டாவதாக பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார சரிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் உயர்வு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த நியாய திட்டம் என்பது பிரதமர் மோடி ஏழைகளிடம் இருந்து பறித்துக்கொண்டதை மீண்டும் அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் சிறு, குறு தொழில்களின் பாதிப்புகள், நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் வைத்திருந்த சேமிப்பு என அனைத்துக்கும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நியாய திட்டம் மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட்டு, மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்படும். தனக்கு வேண்டிய 15 பேருக்கு மட்டுமே பிரதமர் மோடியால் ரூ. 3.5 லட்சம் கோடி வழங்க முடியும் என்றால், 20 சதவீத குடும்பங்களின் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை ஏன் செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com