
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப்பேருந்து, லாரியும் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி ஆக்ராவிலிருந்து நொய்டாவுக்கு பயணிகளுடன் அரசுப்பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து கிரேட்டர் நொய்டா அருகே செல்லும்போது, முன்னால் நோட்டு, புத்தகங்களை ஏற்றிய டாரஸ் லாரியின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜேவர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...