
குஜராத்திலுள்ள காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா (மார்ச் 30) சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அமித் ஷா, இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ளார்.
முன்னதாக, அந்த தொகுதியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிராகஷ் சிங் பாதல், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே மற்றும் லோக் ஜன்சக்தி தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் பேரணியாக புறப்பட்டுச் சென்ற அமித் ஷா, அங்குள்ள படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...