
ரங்கீலா, இந்தியன் புகழ் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
மேலும் கட்சியில் இணைந்த இரண்டு நாட்களுக்குள்ளாக அவர், மும்பை வடக்கு மக்களவைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஊர்மிளா மடோன்கர் கூறியதாவது:
என்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் மிகவும் அனுபவசாலி. ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. எனவே இந்த போட்டியில் அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு நட்சத்திரமாக இல்லாமல், மக்களில் ஒருவராக இருப்பேன், மக்களுக்காக பணிபுரிய விரும்புகிறேன்.
அரசியலில் எனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பங்கள் கிடையாது. நேர்மை தான் எனது ஒரே கொள்கை. நேர்மையான மக்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...