காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல், தான் நினைத்ததை பேசி வருகிறார். அவருடைய நம்பகத்தன்மை மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக-வை வீழ்த்த நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியால் உதவ முடியும். ஆனால், காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது.
தாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், பாஜகவும், பிரதமர் மோடியும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது மட்டும் தான் காங்கிரஸ் கட்சியின் எண்ணமாக உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு தற்போது தான் காங்கிரஸ் கட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது பிரதிபலிக்கிறது.
எதிர்கட்சித் தலைவர் கூட இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்று விமர்சித்தார்.