
கேரள மாநிலம், அரக்கல் சமஸ்தான அரசி ஆதிராஜா சுல்தானா ஃபாத்திமா முத்து பீவி, தலச்சேரியில் உள்ள தனது பூர்விக அரச இல்லத்தில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் மரணடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அரக்கல் சமஸ்தான அரசியாக இருந்த சுல்தானா ஸைனபா ஆயிஷா பீவி கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, 39-ஆவது அரசியாக ஆதிராஜா சுல்தானா ஃபாத்திமா முத்து பீவி பொறுப்பேற்றார். அரக்கல் அரச குடும்பத்தின் பாரம்பரியப்படி, இக்குடும்பத்தின் அரசிகள் அரக்கல் பீவி என்று அழைக்கப்படுவது வழக்கம். சுல்தானா ஃபாத்திமா முத்து பீவிக்கு, ஆதிராஜா கதீஜா சோபியா என்ற மகள் உள்ளார். கேரளத்தின் கண்ணூர் பகுதியும் லட்சத் தீவின் தெற்கு பகுதியும் அரக்கல் அரச குடும்பத்தின் ஆட்சியில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.