மகா கூட்டணி மகா ஊழலுக்கு வழிவகுக்கும்

எதிர்க்கட்சிகளின் "மகா கூட்டணி', மகா ஊழலுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகா கூட்டணி மகா ஊழலுக்கு வழிவகுக்கும்
Updated on
1 min read

எதிர்க்கட்சிகளின் "மகா கூட்டணி', மகா ஊழலுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 காங்கிரஸுக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சி செயல்பட்டு வருவதாகவும், இதனால் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
 எதிர்க்கட்சிகளின் "மகா கூட்டணி' மிகவும் ஆபத்தானது. அக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சந்தர்ப்பவாதமும், ஜாதியமும், குடும்ப அரசியலும் அதிகரித்துவிடும். இக்கூட்டணியின் ஆட்சி மகா ஊழலுக்கே வழிவகுக்கும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காங்கிரûஸ கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ஒருவர் (பிரியங்கா) சமாஜவாதி கட்சியின் பிரசார மேடைகளில் பேசி வருகிறார்.
 காங்கிரஸுக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், சமாஜவாதியும் காங்கிரஸும் கூட்டு சேர்ந்துகொண்டு, பகுஜன் சமாஜ் கட்சியுடன் பகடை ஆட்டம் ஆடிவருவது தெளிவாகத் தெரிகிறது. பகுஜன் சமாஜ் கட்சியைப் பயன்படுத்திக் கொண்டு, சமாஜவாதியும் காங்கிரஸும் முன்னேற முயன்று வருகின்றன. பிரதமர் ஆகிவிடலாம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கனவு கண்டு வருகிறார். ஆனால், அவர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்.
 நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தியதிலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதிலும் கைதேர்ந்த காங்கிரஸ், தற்போது வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக மாறிவிட்டது. விரைவில் அக்கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகவும் நேர்மையானவர் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். ஆனால், அவர் ஊழல்வாதி என்பது பின்னாளில் அம்பலமானது.
 "மோடியின் மதிப்புக்குக் களங்கம் ஏற்படுத்துவதே தனது இலக்கு' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால், பாஜக அரசுக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி, மத்தியில் வலிமைகுறைந்த ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் முயன்று வருகிறார். ராஜ குடும்பத்திலோ, தங்கத் தட்டு கொண்டோ நான் பிறக்கவில்லை. வெறும் பொய்களைக் கூறி, எனது 50 ஆண்டுகால போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது. பாஜக அரசால் மட்டுமே வலிமைவாய்ந்த ஆட்சியைத் தரமுடியும். மீண்டும் எனது தலைமையில் அரசு அமைவது உறுதி.
 பயங்கரவாதிகளுக்கு எதிராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, பயங்கரவாதிகள் அனைவரும் "மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது' என்று வேண்டி வருகின்றனர். ஆனால், மக்கள் அனைவரும் மோடி அரசே மீண்டும் அமைய வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com