யானைகள் இல்லாமல் திருச்சூர் பூரம்?

கேரள மாநிலம், திருச்சூரில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவுக்கு, யானைகளை அனுப்பப் போவதில்லை என்று யானை உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கேரள மாநிலம், திருச்சூரில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவுக்கு, யானைகளை அனுப்பப் போவதில்லை என்று யானை உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இவ்விழாவில் பங்கேற்க தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் என்ற யானைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து, யானை உரிமையாளர்கள் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. 
திருச்சூரில் வரும் 14-ஆம் தேதி பூரம் திருவிழா நடைபெறவுள்ளது. அதன் இறுதி நிகழ்வாக நடைபெறும் குடைமாற்றம் நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடுவர். இந்நிகழ்ச்சியில் தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் யானை முதன்மையாக பங்கேற்கும். ஆனால், இந்த ஆண்டு திருவிழாவில் தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் யானைக்கு அரசு தடை விதித்துள்ளது. அந்த யானை தாக்கி, ஏற்கெனவே 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பூரம் விழாவில் அதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் வனத் துறை அதிகாரி ஒருவர், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் அந்த யானைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, யானை உரிமையாளர்களுடன் தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com