சுடச்சுட

  

  பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா?: மோடி ஆவேசம் 

  By DIN  |   Published on : 12th May 2019 03:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modinew

   

  குஷி நகர்: பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

  ஜம்மு - காஷ்மீரின் சோபியான் நகரில் ஹிந்த் சீதாபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் ஞாயிறன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது அவர்கள் மீது பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சுடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும்  வெடிப்பொருட்கள் பாதுகாப்பு படையினர்  கைப்பற்றினர்

  இந்நிலையில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

  இந்திய நாடாளுமன்றத்துக்கான ஆறாவது கட்டத் தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஞாயிறன்று நடக்கிறது.

  அதேசமயம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியில் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி ஞாயிறன்று பேசினார். தனது  பேச்சில் அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகிய இருவரையும் கடுமையாக  விமர்சித்தார். மேலும் அவர் பேசும்போது கூறியதாவது:

  இன்று  காஷ்மீரில் பயங்கரவாதிகள் நமது ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர்.  இருந்தபோதும் தேர்தல் நடக்கும்பொழுது மோடி ஏன் பயங்கரவாதிகளை கொன்றார் என ஒரு சிலர் வருத்தமடைவர்.கேள்வி எழுப்புவர். 

  நமது வீரரகளைக் கொள்ள ஆயுதமேந்திய ஒரு பயங்கரவாதி தாக்குதல் நடத்த வருகிறான்.  அப்போது நமது வீரர்கள் தேர்தல் ஆணையத்திடம் சென்று அவனை கொல்வதற்கு அனுமதி கேட்டு விட்டுதான் செல்ல வேண்டுமா?

  இவ்வாறு மோடி பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai