
உத்திரப் பிரதேசத்தின் சந்தாலி மக்களவைத் தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதி மற்றும் ஏழாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி,மீண்டும் போட்டியிடும், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தின் சந்தாலி மக்களவைத் தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.