
மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி மொத்தம் 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களிலும், 1 யூனியன் பிரதேசத்திலும் மொத்தம் 59 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இங்கு 3 மணி நிலவரப்படி மொத்தம் 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.
- பிகார் - 46.66% (8 தொகுதிகள்)
- ஹிமாச்சல பிரதேசம் - 49.43% (4 தொகுதிகள்)
- மத்தியப் பிரதேசம் - 57.27% (8 தொகுதிகள்)
- பஞ்சாப் - 48.18% (13 தொகுதிகள்)
- உத்தரப் பிரதேசம் - 46.07% (13 தொகுதிகள்)
- மேற்கு வங்கம் - 63.58% (9 தொகுதிகள்)
- ஜார்கண்ட் - 64.81% (3 தொகுதிகள்)
- சண்டிகர் - 50.24% (1 தொகுதி)