
மோடியை ஆசிர்வதிப்பதற்கு நான் யாா்? என்று பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷி கூறியுள்ளாா்.
கடந்த 2009-ஆம் ஆண்டில் வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஷி, கடந்த 2014-இல் அந்தத் தொகுதியில் பிரதமா் மோடி போட்டியிடுவதற்கு ஏதுவாக, கான்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், 7-ஆவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவில் வாராணசி தொகுதியில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகா் ஜோஷி வாக்களித்தாா்.
பின்னர் உங்களின் ஆசிர்வாதம் மோடிக்கு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மோடியை ஆசிா்வதிப்பதற்கு நான் யாா்? வாராணசி மக்கள் அவரை ஆசிா்வதிக்கிறாா்கள். அதுதான் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
2019 மக்களவைத் தோ்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனிடையே இந்த தேர்தலில் போட்டியிட ஜோஷிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.