
பாட்னா: பிகார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் இல்லத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரியப்பா கிராசூர் (29). பிகாரின் பாட்னாவில் உள்ள சர்குலர் சாலை பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வரும் முன்னாள் பிகார் முதல்வர் ராப்ரிதேவியின் இல்லத்தில் பாதுகாப்புப்பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து இறந்திருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வருவதாக
கூறினர்.