சுடச்சுட

  

  ஆளப்போவது யார்? 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  By DIN  |   Published on : 19th May 2019 06:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Parliament_of_india


  17-வது மக்களவைத் தேர்தலில் நாட்டில் மொத்தம் உள்ள 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

  17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், மொத்தம் 918 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

  இதில் மொத்தம் உள்ள 10.17 கோடி வாக்காளர்களில், 7.27 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 

  மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 73.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

  • பிகார் - 49.92% (8 தொகுதிகள்)

  • ஹிமாச்சல பிரதேசம் - 66.18% (4 தொகுதிகள்)
    
  • மத்தியப் பிரதேசம் - 69.38% (8 தொகுதிகள்)
    
  • பஞ்சாப் - 58.81% (13 தொகுதிகள்)
    
  • உத்தரப் பிரதேசம் - 54.37% (13 தொகுதிகள்)
    
  • மேற்கு வங்கம் - 73.05% (9 தொகுதிகள்)
    
  • ஜார்கண்ட் - 70.5% (3 தொகுதிகள்)
    
  • சண்டிகர் - 63.57% (1 தொகுதி) 
    

  7 கட்டங்களாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai