நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார்: சோனியா காந்தி

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 
நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார்: சோனியா காந்தி


நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி மீண்டும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, ரேபரலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

அந்தக் கடிதத்தில், 

"நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கவும், காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் நான் பெற்ற எதையும் தியாகம் செய்ய தயார். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். வரும் நாட்கள் கடினமானது என்பது எனக்கு தெரியும். எனினும், உங்களது ஆதரவு மற்றும் நம்பிக்கையின் பலத்தால் காங்கிரஸ் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். 

அனைத்து மக்களவைத் தேர்தலை போல், இந்த முறையும் நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நீங்கள் தான் என் குடும்பம். உங்களிடம் இருந்துதான் நான் உத்வேகம் பெறுகிறேன். நீங்கள் தான் எனது உண்மையான சொத்து" என்று சோனியா தெரிவித்தார். 

ரேபரேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தினேஷ் பிரதாப் சிங்கை 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி வென்றார். இதன்மூலம் அத்தொகுதியில் இருந்து தொடர்ந்து 4-ஆவது முறையாக அவர் மக்களவைக்குத் தோ்வாகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com