
புது தில்லி: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்குவது தொடர்பாக மோடி - அமித் ஷா தலைமையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியானது.
அதன்படி, முதல் முறையாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித் துறை அமைச்சகமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகமும், உணவு மற்றும் நுகர்கோவர் விவகாரங்கள் துறை ராம் விலாஸ் பாஸ்வானுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பியூஸ் கோயலுக்கு மீண்டும் ரயில்வே துறையும், நிதின் கட்கரிக்கு மீண்டும் அவர் வகித்து வந்த சாலைப் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி தேர்வாகியுள்ளார். தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் பெட்ரோலியத்துறை அமைச்சகமும், ஹர்ஷவர்தன் சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் ஜவ்டேகருக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையும், ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டத்துறை, தகவல் தொடர்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அமைச்சர்களுக்கான இலாக ஒதுக்கீடு விவரங்கள்
கிரண் ரிஜிஜூ - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
நரேந்திர சிங் தோமர் - விவசாயத் துறை
ரமேஷ் பொக்ரிபால் - மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை
சதானந்த கவுடா - உரம் மற்றும் ரசாயனத்துறை