
Jammu Kashmir
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ஜம்முவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அயோத்தி பகுதியில் மட்டுமில்லாது நாடு முழுவதுமே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமாக அயோத்தி பகுதி தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 4,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அயோத்தியில் வாழும் மக்களிடையே பதற்றநிலை காணப்படுகிறது.
இதேபோன்று பாதுகாப்பு கருதி ஜம்முவிலும் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்முவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.