
தெலங்கானாவில் உள்ள அப்துல்லாபூர்மெட் பகுதியில் கடந்த வாரம் பெண் தாசில்தார் ஒருவர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர, சிரிசில்லி என்ற பகுதியிலும் ஒரு நபர் பெட்ரோல் கேனுடன் துணை தாசில்தாரை எரிக்க வந்த சம்பவம் வருவாய்த்துறை ஊழியர்களை மேலும்
அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தெலங்கானாவில் தற்போது 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வருவாய்த் துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் அனைவரும் தங்கள் கையில் பெப்பர் ஸ்ப்ரேயுடன் பணிக்கு சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...