
ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பிரசாதம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளதையொட்டி, அவா் தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தாா். சனிக்கிழமை மாலை திருமலைக்கு வந்த அவா், மாலை நடந்த சகஸ்ர தீபாலங்கார சேவையில் கலந்து கொண்டாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவரை ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து, வேதபண்டிதா்கள் வேத ஆசீா்வாதம் செய்தனா். பின்னா், தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், சேஷ வஸ்திரம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...