
கோப்புப் படம்
சியாச்சின்: காஷ்மீரின் சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் சியாச்சின் மலைப்பகுதி உலகின் மிக உயரமான போர்களப் பகுதியாகும்.
சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திங்கள் மாலை திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பனிச்சரிவில் ஐந்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.