Uddhav Thackeray
Uddhav Thackeray

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.


சென்னை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஏற்கெனவே உத்தவ் தாக்கரேவிடம் கூறியிருந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சனிக்கிழமை பிற்பகலில், முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு 169 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக 169 எம்எல்ஏக்களின் ஆதரவோடு உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார். 

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜக உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

288 எம்எல்ஏக்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 105 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 4 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்துக்கு எதிராக ஒரு எம்எல்ஏவும் வாக்களிக்கவில்லை.

மாகாராஷ்டிர பேரவையில் மொத்தம் 288 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் பாதிக்கு மேல் அதாவது 145 எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மைக்கு தேவை. சிவசேனை கட்சியில் 56, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 54 காங்கிரஸில் 44 என மொத்தம் 154 எம்எல்ஏக்கள் உத்தவ் அரசுக்கு உள்ளனா். 

இதுதவிர சில சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், மகாராஷ்டிர விகாஸ் முன்னணி ஆட்சி எந்த சிக்கலும் இல்லாமல், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

பேரவைத் தோ்தலில் 105 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, எதிா்கட்சியாக செயல்பட இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com