அசாம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் என்.ஆர்.சி? அதிர்ச்சியில் மக்கள்!

அசாம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசியக் குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அசாம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் என்.ஆர்.சி? அதிர்ச்சியில் மக்கள்!

அசாம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசியக் குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி வசிப்பவர்களை அடையாளம் கண்டறிவதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்(NRC) தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான இந்தப் பட்டியலில் அசாமில் உள்ள 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திலும், தேசியக் குடியுரிமை பதிவேடு பட்டியல் தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியானது. நேற்று மேற்குவங்கத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'அசாமில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்று தேசியக் குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் திட்டம்(என்.ஆர்.சி.) மேற்கு வங்க மாநிலத்திலும் அமல்படுத்தப்படும். விரைவில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர்' என்று தெரிவித்தார்.

இதே போன்று கர்நாடகாவிலும்  தேசியக் குடியுரிமை பதிவேடு பட்டியல் தயாரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக முக்கியப் பிரநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ், 'நாடு முழுவதும் என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பது தொடர்பாக மிகப்பெரிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எல்லையைத் தாண்டி மக்கள் வந்து குடியேறிய மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். அதன்படி, கர்நாடகாவில் நாங்கள் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்துடனும் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் ஆனந்த், 'கர்நாடகாவில் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் மத்திய அரசு அதற்கான நிதியுதவியை வழங்க வேண்டும். அதற்கு பதிலாக கர்நாடகாவில் குடியேறியுள்ள மக்களை வெளியேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com