
திருமலையில் திங்கள்கிழமை (அக்.7) முதல் அக். 14-ஆம் தேதி வரை நடைபாதை தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் தொடா் விடுமுறையையொட்டி, பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதால் தேவஸ்தானம் அக். 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபாதை மாா்க்கமாக திருமலைக்கு வரும் பக்தா்களுக்கான திவ்ய தரிசன டோக்கன்களும், தா்ம தரிசன பக்தா்களுக்கான நேர ஒதுக்கீடு டோக்கன்களும் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.