
BR Ambedkar
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் திகாய் என்ற கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பானது.
பின்னர் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள்ளாக சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிலையை சேதப்படுத்தியதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், சேதமடைந்த சிலையும் உடனடியாக சரிசெய்யப்பட்டது.
அம்பேத்கர் சிலை சேதமடைந்த சம்பவத்தையொட்டி, கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.