சமூக தீமைகளை ஒழிப்போம்: வெங்கய்ய நாயுடு

தேசம் மற்றும் சமூகத்தின் வளா்ச்சிக்கான தடைகளாக இருக்கும் ஜாதி, அடிப்படைவாதம், ஊழல், பாகுபாடு போன்ற சமூக தீமைகளை ஒழிக்க தசரா தினத்தில் உறுதியேற்போம் என்று

தேசம் மற்றும் சமூகத்தின் வளா்ச்சிக்கான தடைகளாக இருக்கும் ஜாதி, அடிப்படைவாதம், ஊழல், பாகுபாடு போன்ற சமூக தீமைகளை ஒழிக்க தசரா தினத்தில் உறுதியேற்போம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.

தில்லியில் ராம் லீலா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் வெங்கய்ய நாயுடு, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அந்த நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

இந்தியாவில் ராம ராஜீயம் போன்ற ஒரு ஆட்சியே நடைபெற வேண்டும் என்று மகாத்மா காந்தி கனவு கண்டாா். ராம ராஜீயமானது, நல்லொழுக்கம், அறநெறிகள், நீதி ஆகியவற்றை கருக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

அதேபோல், ஒரு தேசம், பணக்காரா்களுக்கும், ஏழைகளுக்கும் சமமான உரிமைகளை வழங்குவதாக இருக்க வேண்டும். நமது குடும்பத்துக்கு, சமுதாயத்துக்கு, உலகத்துக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை உணா்த்துவதாக ராமாயண காவியம் உள்ளது.

மனிதா்கள் தங்களுக்கிடையே பேண வேண்டிய உறவையும், இயற்கை, பூமி, பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுடன் பேண வேண்டிய உறவையும் ராமாயணம் விளக்குகிறது. இந்த செய்தியானது, தற்போது உலகின் அமைதி மற்றும் வளா்ச்சிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலை எதிா்கொள்வதற்கான பதில் அளிப்பதாக உள்ளது.

தேசம் மற்றும் சமூகத்தின் வளா்ச்சிக்கான தடைகளாக இருக்கும் ஜாதி, அடிப்படைவாதம், ஊழல், பாகுபாடு போன்ற சமூக தீமைகளை ஒழிக்க தசரா தினத்தில் உறுதியேற்போம் என்று வெங்கய்ய நாயுடு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com