நவம்பர் மாதம் நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

பொருளாதார மந்தநிலையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி, வரும் நவம்பர் 5-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்


பொருளாதார மந்தநிலையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி, வரும் நவம்பர் 5-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கையில்,

"மக்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக கட்சி போராட்டம் நடத்தவுள்ளது. இந்தப் போராட்டம் நவம்பர் 5 முதல் 15 வரை ஒவ்வொரு மாவட்ட அளவிலும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். இறுதியாக அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம் தில்லியில் மிகப் பெரிய பேரணியாக நிறைவுபெறவுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தின் மூலம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வங்கிகள் அமைப்பில் ஏற்பட்ட சரிவு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவனம் ஈர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்தப் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, அக்டோபர் 15 முதல் 25 என தேதிகள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல்களைக் காரணம் காட்டி இது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் போராட்டம் தற்போது நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com