இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ 

இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ 

இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி நீள்வட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவின் நீள்வட்டப் பாதைக்குச் சென்று சுற்றி வருகிறது. இந்த நிலையில், விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 

அதன் மூலம், விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி பிரிக்கப்பட்ட இடத்தில் இருந்தபடியே, நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திட்டம் வெற்றி பெற்றால் அமேரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தை இறக்கிய 4ஆவது நாடாக இந்தியா திகழும். விக்ரம்லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்வையிடவுள்ளார். அவருடன் 70 மாணவர்கள் பார்வையிட உள்ளனர் என்பதும் அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரோவரை சுமந்து செல்லும், விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் குறித்து இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com