நிலவை தொடும் முயற்சி நிச்சயமாக வெற்றியடையும்: பிரதமர் மோடி நம்பிக்கை

நாட்டின் வளர்ச்சிக்கு நம்பமுடியாத அளவு பணியாற்றியுள்ளீர்கள். மோடியின் ஊக்க உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் 
நிலவை தொடும் முயற்சி நிச்சயமாக வெற்றியடையும்: பிரதமர் மோடி நம்பிக்கை


சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றிவந்த விக்ரம் லேண்டர், தரையிறங்கும்போது  பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகளும் இஸ்ரோ தொழில்நுட்பக் குழுவினரும் கவலைக்குள்ளாயினர். கட்டுப்பாட்டு மையத்தில் சிலர் கண்ணீர் விட்டு அழுததையும் காண முடிந்தது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை (செப் 7) 8 மணியளவில் மீண்டும் பெங்களுருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த மோடி, விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அவரது உரையில், இந்தியாவின் கவுரவத்திற்காக வாழும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அதிருப்தியை, கவலையை நான் அறிவேன். சந்திராயன்- 2 திட்டத்திற்காக நீங்கள் பல இரவுகள் தூக்கத்தை தொலைத்துள்ளீர்கள்.

நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் இந்தியா பெருமை கொள்கிறது. தாய்நாட்டின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். தாய்நாட்டுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள்.

இதுவரை யாரும் முயற்சி செய்யாததை நீங்கள் முயற்சித்தீர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு நம்பமுடியாத அளவு பணியாற்றியுள்ளீர்கள். மோடியின் ஊக்க உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டனர். 

கடைசி நிமிட பின்னடைவு நிரந்தமானதல்ல, நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நானும், நாடும் எப்போதும் விஞ்ஞானிகளுடன் இருக்கிறோம். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இந்த முயற்சியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம். கடந்த காலங்களில் நாம் தடைகளை சந்தித்தாலும் அவற்றை தாண்டியிருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. 

அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே இல்லை. விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சி செய்வதுதான். இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது என்றும், நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன என்று பேசிய மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கை கொடுத்து ஊக்கப்படுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com