ஆளுநர் பதவிக்காலம் முடிந்து மீண்டும் பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் 

தனது ஆளுநர் பதவிக்காலம் முடிந்தவுடன் முன்னாள் முதல்வர் ஒருவர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் மீண்டும் இணைந்த கல்யாண் சிங்
பாஜகவில் மீண்டும் இணைந்த கல்யாண் சிங்

லக்னௌ: தனது ஆளுநர் பதவிக்காலம் முடிந்தவுடன் முன்னாள் முதல்வர் ஒருவர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

தொன்னூறுகளில் பாஜக சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராகப் பதவி வகித்தவர் கல்யாண் சிங். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இவரது ஆட்சிக் காலத்தில் நடந்ததன் காரணமாக , அவரது அரசுப் பதவி நீக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

மோடி தலைமையில் பாஜக 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன் கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் செப்டம்பர் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

பதவிக்காலம் முடிந்த நிலையில் கல்யாண் சிங் திங்களன்று மீண்டும் பாஜகவில் முறைப்படி இணைந்தார். லக்னௌவில் நடைபெற்ற அவரது பதவியேற்பு நிகழ்விற்கு மாநில பாஜக தலைவர் சுதந்திரதேவ் சிங் முன்னிலை வகித்தார்.

எடவா தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ள அவரது மகன் ராஜ்வீர் சிங் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அமைச்சராக உள்ள பேரன் சந்தீப் சிங்  ஆகிய இருவரும் அப்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com