
குஜராத்தில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக, பரூச் மாவட்டத்தில் நர்மதை நிதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து பரூச் மாவட்ட ஆட்சியர் மோடியா கூறியதாவது:
நர்மதை மாவட்டம், கேவடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணையில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டி உயர்ந்து வருகிறது. 22 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்று மோடியா தெரிவித்தார். நவ்சாரி மாவட்டத்தின் கந்தேவியில் செவ்வாய்க்கிழமை 114 மி.மீ. மழை பெய்தது.
சூரத் மாவட்டத்தின் சோர்யாசி (94 மி.மீ.), கிர்சோம்நாத் மாவட்டம் (93மீ.மீ.) மழை பெய்தது என்று குஜராத் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.