சுடச்சுட

  

  பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..

  By Muthumari  |   Published on : 11th September 2019 06:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  IRCTC

   

  தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷப் பண்டிகைகளுக்கு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வது வழக்கமான ஒன்று. நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே, ரயிலில் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவில், தென்பகுதி ரயில்களில் தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து போவதும் வழக்கம் தான். 

  இந்நிலையில், 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்லும் வெளியூர் வாசிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதில், வார விடுமுறை நாட்களைத் தவிர, ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாளாகும். வெளியூரில் வேலை செய்பவர்கள் திங்கட் கிழமை மட்டும் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறையை கொண்டாடலாம். 

  இதில், ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை நாளை(செப்.12) முன்பதிவு செய்யலாம். சரியாக காலை 8 மணிக்கு ஐஆர்சிடிசி -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது ஐஆர்சிடிசி மொபைல் செயலி மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 

  அதேபோன்று ஜனவரி 11ம்  தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி(திங்கட்கிழமை) முன்பதிவு செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 

  பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும். 

  அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai