தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்ற வைப்பது, விடுமுறை அளிப்பதில் கடும் கட்டுப்பாடு போன்றவற்றை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு முன்னணி நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அந்த பொது நலன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 3 பேர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பும் இணைந்து தெலங்கானா நீதிமன்றத்தில் இந்த பொது நலன் மனுவை தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்னும் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.