ஹிந்தியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும்: அமித் ஷா 

"நாட்டில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஹிந்தி மொழியால் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைக்க முடியும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹிந்தியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும்: அமித் ஷா 

"நாட்டில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஹிந்தி மொழியால் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைக்க முடியும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
"ஹிந்தி தினம்' சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரசியல் நிர்ணய சபையால், அலுவலக மொழியாக ஹிந்தி ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஆனால் நாடு முழுவதும் ஒரு பொதுவான மொழி இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த மொழி, இந்தியாவின் அடையாளமாக உலக அரங்கில் இருக்கும். தங்களது தாய்மொழியை ஊக்குவிப்பது போல, ஹிந்தியையும் மக்கள் ஊக்குவிக்க வேண்டும். நாடு முழுவதும் பொதுவான மொழி இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நினைவாக்குவதற்காக மக்கள் ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பின்னர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரிடத்திலும் ஹிந்தியை கொண்டு சேர்க்க வேண்டும். அடுத்த ஆண்டில், நாட்டின் பல இடங்களில் ஹிந்தி தின நிகழ்ச்சிகளை நாம் கொண்டாட வேண்டும். வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும்போது, ஹிந்தி மொழி நாட்டில் மிகச் சிறப்பான அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்.
நமது நாட்டில் ஏராளமான மொழிகளும், வட்டாரப் பேச்சு வழக்குகளும் உள்ளன.  ஆனால் அந்நிய மொழியொன்று நமது நாட்டு மொழிகளை முந்திவிடுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளக் கூடிய மொழி, அரசின் மொழியாக இருக்க வேண்டும் என்று சோஷலிஸ தலைவர் ராம் மனோகர் லோஹியா தெரிவித்திருந்தார். அதை நாம் பின்பற்ற வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பதவியேற்றபோது, என்னிடம் ஒப்புதலுக்கு வந்த ஆவணங்கள் எதுவுமே ஹிந்தியில் இல்லை. தற்போது, 60 சதவீத ஆவணங்கள் ஹிந்தியில் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகின்றன. 
நாட்டின் புதிய தலைமுறை, நமது மொழியை பேசுவதற்கு பெருமைப்பட்டால்தான், அந்த மொழி நிலைத்து நிற்கும். விடுதலைப் போரின்போது, நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ்  மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில்  ஹிந்தியிலேயே தலைவர்கள் உரையாற்றினர். அது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.
 இன்று ஹிந்தி வழியில் பயிலும் ஒரு மாணவரால், தொடர்ந்து 40 நிமிடங்கள் ஹிந்தியில் உரையாட முடியவில்லை. ஆங்கில மொழியின் தாக்கம் நம்மிடையே அதிகரித்து காணப்படுகிறது. அதைக் கலந்துவிடாமல் பேச முடியாது என்பதுபோன்ற நிலை காணப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு ஹிந்தி எழுத, படிக்க கற்றுத் தருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ஐ.நா. பொதுச் சபையில் ஹிந்தியில் உரையாற்றி பெருமை சேர்த்தனர் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com