கிரைண்டர், உலர்ந்த புளி ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன்

அனைத்து துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிகாரமிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.  
கிரைண்டர், உலர்ந்த புளி ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன்

அனைத்து துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிகாரமிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.  

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் இன்று நடைபெற்றது. மந்த நிலை கண்டுள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதேநேரம், வருவாய் நிலையை கருத்தில் கொண்டும் சரக்கு மற்றும் சேவை வரிகளை சீரமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தாவது பின்வருமாறு:

  • வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் இருந்து 5% ஆக குறைப்பு.
  • ஹோட்டலில் தினவாடகை ரூ.1000-க்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது
  • சமையலுக்கு பயன்படுத்தப்படும் உலர்ந்த புளிக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com