பொருளாதார குழப்பத்தை எந்த நிகழ்ச்சியாலும் மறைக்க முடியாது: ராகுல் காந்தி

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கும் மோடி நலமா நிகழ்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார குழப்பத்தை, எந்த நிகழ்ச்சியாலும் மறைக்க முடியாது
பொருளாதார குழப்பத்தை எந்த நிகழ்ச்சியாலும் மறைக்க முடியாது: ராகுல் காந்தி


அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கும் மோடி நலமா நிகழ்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார குழப்பத்தை, எந்த நிகழ்ச்சியாலும் மறைக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் இந்திய-அமெரிக்கர்கள் கலந்துகொள்ளும் மோடி நலமா (ஹெளடிமோடி) எனும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்கவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், பெரு நிறுவனங்களுக்கான வரியை 25.17 சதவீதமாக குறைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
பெரு நிறுவன வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து, ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மோடி நலமா நிகழ்ச்சிக்கு முன்பாக, பங்குச் சந்தையை ஏற்றம் காணச் செய்வதற்கு பிரதமர் மோடி எதையும் செய்ய தயாராகிவிட்டார் என்பது வியப்பளிக்கிறது. ரூ.1.45 லட்சம் கோடி செலவில் நடைபெறும் ஹூஸ்டன் நிகழ்ச்சிதான், உலகிலேயே மிகவும் ஆடம்பரமான நிகழ்ச்சியாகும்.  இந்தியாவில் பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார குழப்பத்தை, எந்த நிகழ்ச்சியாலும் மறைத்துவிட முடியாது என்று தனது பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com