ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளில் அரசின் தலையீடு இல்லை: சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளில் அரசின் தலையீடு இல்லை: சக்திகாந்த தாஸ்


ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி, பல்வேறு பொருளாதார விவகாரங்கள் குறித்து மத்திய அரசுடன் வெளிப்படையான முறையில் ஆலோசனை நடத்துகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும்போது அதில் மத்திய அரசு எந்த தலையீடும் செய்வதில்லை.
நிதிக் கொள்கை தொடர்பாக இறுதி முடிவெடுப்பதில் ரிசர்வ் வங்கி 100 சதவீதத்துக்கும் அதிகமான தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. அதன் முடிவில் யாரும் குறுக்கிட முடியாது.
ஆனால் அரசு என்பதற்கே முழு இறையாண்மை உள்ளது. அதன் கீழ்தான் ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும். அரசின் முடிவுகளை விமர்சிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி நடந்துகொள்ள முடியாது.
நோக்கங்கள் வெவ்வேறாக இருப்பதால் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது எல்லா நாடுகளிலும் இயல்பானதே. ஆனாலும், அந்த கருத்து வேறுபாடுகளை களைவதற்கு பேச்சுவார்த்தை என்பது மிக இன்றியமையாத தேவையாக உள்ளது.
இடையூறு விளைவிக்காத வங்கி இணைப்பு: வங்கி இணைப்பு நடைமுறையை இடையூறுகள் ஏற்படாத வண்ணம் முழுமையான அளவில் நிறைவேற்ற ரிசர்வ் வங்கி உறுதிபூண்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு செலவின நடவடிக்கைகளை துரிதப்படுத்த தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது முன்பை விட வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com